/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாடுகளை திறந்த வெளியில் கட்ட வேண்டாம் சளி பிடிக்கும் என கால்நடை மருத்துவர் அறிவுரை

ADDED : டிச 12, 2025 06:29 AM
திருவாலங்காடு: பனிக்காலம் துவங்க இருப்பதால், ஆடு, மாடு போன்ற கால்நடைகளை திறந்த வெளியில் கட்டி வைக்க வேண்டாம் என, கால்நடை மருத்துவர் அறிவுறுத்தி உள்ளார்.
திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில், திருவாலங்காடு, மணவூர், கனகம்மாசத்திரம், ஆற்காடு குப்பம் உட்பட நான்கு கால்நடை மருந்தகங்கள் உள்ளன. 30,௦௦௦ த்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் பராமரிக்கப்படுகின்றன. தற்போது பனிக்காலம் துவங்கி உள்ளதால் மாடுகளை பராமரிப்பது குறித்து திருவாலங்காடு வட்டார கால்நடை மருத்துவர்கள் கூறியதாவது:
மாடுகளுக்கு கால்புண் மற்றும் வாய்புண் வராமல் தடுக்க, ஆண்டுக்கு இரண்டு முறை தடுப்பூசி போடப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் தடுப்பூசி போடப்பட்டது. மீண்டும் ஜனவரியில் போடப்படும்.
மழை மற்றும் பனிக்காலத்தில், வீட்டில் வளர்க்கும் கறவை மாடுகள் மற்றும் காளை மாடுகளை, திறந்த வெளியில் கட்டி வைக்கக்கூடாது. மரத்தின் அடியில், மின் கம்பங்களில் கட்டி வைக்க வேண்டாம். ஈரம் இல்லாத இடத்தில் கூடாரம் அல்லது கொட்டகை அமைத்து பராமரிக்க வேண்டும்.
பனி துவங்கி உள்ளதால் சளி பிடித்து நோய் தொற்று வர வாய்ப்பு உள்ளது. மாடுகளுக்கு சளி ஏற்படவும், செரிமான கோளாறு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. மாடுகளுக்கு தீவனம் வைத்த பின் வெந்நீர் வைக்க வேண்டும். மாடுகள் தீவனம் மற்றும் தண்ணீர் உட்கொள்ளாமல் இருந்தால், கால்நடை மருத்துவரை உடனே அணுக வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.