/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையோர இறைச்சி கடைகள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
சாலையோர இறைச்சி கடைகள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
சாலையோர இறைச்சி கடைகள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
சாலையோர இறைச்சி கடைகள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : நவ 10, 2025 01:46 AM

திருவாலங்காடு: திருவாலங்காடின் பிரதான சாலையில் உள்ள இறைச்சி கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், தங்கள் வாகனங்களை சாலையிலேயே நிறுத்துவதால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர்.
திருவள்ளூர் ---- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில் உள்ள திருவாலங்காடில், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை தேரடி முதல் சர்க்கரை ஆலை நால்ரோடு வரை, 100க்கும் மேற்பட்ட கோழி, ஆடு, மீன் உள்ளிட்ட இறைச்சி கடைகள் அமைக்கப்படுகின்றன.
இவர்களுக்கு சந்தை கூடம் இல்லாததால், நெடுஞ்சாலையோரம் கடை அமைத்து வியாபாரம் செய்கின்றனர். இறைச்சி வாங்க வரும் வாடிக்கையாளர்கள், சாலையிலேயே தங்கள் வாகனங்களை நிறுத்துகின்றனர்.
இதனால், திருவள்ளூர் ---- அரக்கோணம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும், வாகன போக்குவரத்து அதிகமுள்ள இச்சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, திருவாலங்காடில் இறைச்சி கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

