/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையோரம் நிறுத்தும் வாகனங்கள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
சாலையோரம் நிறுத்தும் வாகனங்கள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
சாலையோரம் நிறுத்தும் வாகனங்கள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
சாலையோரம் நிறுத்தும் வாகனங்கள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : மே 28, 2025 02:25 AM

திருவாலங்காடு:திருவள்ளூர் ---- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது திருவாலங்காடு கிராமம்.
இங்கு சாலையோரத்தில் பி.டி.ஓ., அலுவலகம் துவங்கி சர்க்கரை ஆலை சந்திப்பு வரை ஆங்காங்கே கனரக வாகனங்கள் நிறுத்தி வைத்திருப்பதால், விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.
வளர்ந்து வரும் கிராமமான திருவாலங்காடில், நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. மேலும், இங்கிருந்து செல்லும் பிரதான வழித்தடங்களில், போக்குவரத்து அதிகம் உள்ளது.
அதேநேரம், கனரக வாகன ஓட்டுநர்கள் சிலர், சாலையோரம் இரு புறத்திலும், வாகனங்களை நிறுத்தி விட்டு ஓய்வெடுக்க முற்படுகின்றனர்
குறிப்பாக, வாகனங்களை நிறுத்தி, உணவு சாப்பிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால், அவ்வழித்தடத்தில், அதிவேகமாக செல்லும் வாகனங்கள், விபத்துக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது.
எனவே நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.