/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இரவில் சுற்றித்திரியும் மாடுகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
இரவில் சுற்றித்திரியும் மாடுகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
இரவில் சுற்றித்திரியும் மாடுகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
இரவில் சுற்றித்திரியும் மாடுகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : ஜூலை 30, 2025 12:11 AM
கும்மிடிப்பூண்டி,கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையில், இரவு நேரத்தில் சுற்றித்திரியும் மாடுகளால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி பஜார் பகுதி அமைந்துள்ள ஜி.என்.டி., சாலையில் ஏராளமான காய்கறி மற்றும் பழக்கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடை உரிமையாளர்கள், வீணாகும் காய்கறி மற்றும் பழ கழிவுகளை, இரவு நேரத்தில் சாலையோரம் குவித்து வருகின்றனர்.
அதை உண்பதற்காக, இரவு நேரத்தில் மாடுகள் அங்கு வருகின்றன. அதன்பின், ஜி.என்.டி., சாலையிலேயே இளைப்பாறுகின்றன.
இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே, மாநில நெடுஞ்சாலை துறையினர், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம், பெத்திக்குப்பம் ஊராட்சி நிர்வாகம் இணைந்து, இரவு நேரத்தில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.