/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆபத்தான வளைவுகளால் வாகன ஓட்டிகள் அச்சம்
/
ஆபத்தான வளைவுகளால் வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : அக் 14, 2025 12:15 AM

பொன்னேரி, :
பொன்னேரி - பழவேற்காடு மாநில நெடுஞ்சாலையில் உள்ள சாலை வளைவுகளால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
பொன்னேரி - பழவேற்காடு மாநில நெடுஞ்சாலையில் உள்ள கொடிமரம் பேருந்து நிறுத்தம் - ஆண்டார்மடம் பகுதிகளுக்கு இடையே, அடுத்தடுத்த இரண்டு இடங்களில் சாலை வளைவுகள் உள்ளன.
வளைவுகள் இருப்பது குறித்து அறிவுறுத்தும் வகையில் ஒளிரும் விளக்குகள், எச்சரிக்கை பலகைகள், சாலையோர தடுப்புகள் எதுவும் இல்லை.
பழவேற்காடு பகுதிக்கு செல்லும் வாகன ஓட்டிகள், வளைவு பகுதியை கடக்கும்போது தடுமாற்றம் அடைகின்றனர். இரவு நேர பயணங்களில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், வளைவு பகுதிகளை விரிவாக்கம் செய்து, ஒளிரும் விளக்குகள் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நெடுஞ்சாலைத் துறையினர் மேற்கொள்ள வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.