/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழவேற்காடு பாலத்தில் செடிகள் உறுதித்தன்மை பாதிக்கும் அபாயம்
/
பழவேற்காடு பாலத்தில் செடிகள் உறுதித்தன்மை பாதிக்கும் அபாயம்
பழவேற்காடு பாலத்தில் செடிகள் உறுதித்தன்மை பாதிக்கும் அபாயம்
பழவேற்காடு பாலத்தில் செடிகள் உறுதித்தன்மை பாதிக்கும் அபாயம்
ADDED : அக் 14, 2025 12:15 AM
பழவேற்காடு, பழவேற்காடு ஏரியின் குறுக்கே உள்ள மேம்பாலத்தில் செடிகள் வளர்ந்து, பராமரிப்பு இன்றி இருப்பதால், பாலத்தின் உறுதித்தன்மை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பழவேற்காடு ஏரியின் குறுக்கே, 2010ம் ஆண்டில் மேம்பாலம் கட்டப்பட்டது. கடற்கரையை ஒட்டியுள்ள, 15 மீனவ கிராமங்களின் போக்குவரத்துக்கு இந்த மேம்பாலம்தான் பிரதானமாக உள்ளது.
ஆனால், மேம்பாலத்தின் பக்கவாட்டு கட்டுமானங்களில், ஆங்காங்கே செடிகள் வளர்ந்துள்ளன. இவை, பெரிய அளவில் வளரும்போது, கட்டுமானங்கள் சேதமடையும் அபாயம் உள்ளது.
அதேபோல், இணைப்பு சாலையின் இருபுறமும் மண் சரிந்துள்ளது. துாண்கள் கீழ் பகுதிகளிலும் கான்கிரீட் பெயர்ந்து விழுகிறது.
இந்த மேம்பாலத்தை, மீனவ கிராமத்தினர் மட்டுமின்றி, காட்டுப்பள்ளி துறைமுகம், கப்பல் கட்டும் தளம், அத்திப்பட்டில் உள்ள அனல் மின்நிலையங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பாலம் பராமரிக்கப்படாதது மீனவர்கள் மற்றும் தொழிலாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, பாலத்தை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீனவ கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.