/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கபடி போட்டியில் தகராறு மாணவனின் கை, வயிற்றில் பிளேடால் கீறி தாக்குதல்

ADDED : அக் 14, 2025 12:15 AM
திருத்தணி, : அரசு மேல்நிலைப் பள்ளியில், கபடி விளையாடும்போது மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில், 9ம் வகுப்பு மாணவனின் கை, வயிற்று பகுதியில் பிளேடால் கீறல் போடப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திருத்தணி அடுத்த அருங்குளம் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், 450க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.
இப்பள்ளி மாணவர்கள் சிலர், இரு அணியாக பிரிந்து, மைதானத்தில் நேற்று காலை கபடி விளையாடினர். அப்போது, இரு தரப்பும் இடையே தகராறு நடந்தது.
சிறிது நேரம் கழித்து, 9ம் வகுப்பு பயிலும் ஒரு மாணவர், கழிப்பறைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, மற்றொரு 9ம் வகுப்பு மாணவர் ஓடி வந்து, அவரை கீழே தள்ளி இடது கை, வயிற்று பகுதியில் பிளேடால் கீறினார்.
இதில் காயமடைந்த அந்த மாணவரை, ஆசிரியர்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவனுக்கு சிகிச்சை மற்றும் கையில் 12 தையல் போடப்பட்டது. காயமடைந்த மாணவர், மாலையில் வீடு திரும்பினார். கனகம்மாசத்திரம் போலீசார், பிளேடால் தாக்குதல் நடத்திய மாணவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.