/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையோரம் 'பார்க்கிங்' அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
சாலையோரம் 'பார்க்கிங்' அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : ஆக 28, 2025 01:49 AM

கும்மிடிப்பூண்டி:சூரவாரிகண்டிகை சந்திப்பில் சாலையோரம் அணிவகுத்து நிறுத்தப்படும் கனரக லாரிகளால், கவரைப்பேட்டை - சத்தியவேடு நெடுஞ்சாலையில், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
கவரைப்பேட்டை - பொம்மாசிகுளம் வரையிலான, கவரைப்பேட்டை - சத்தியவேடு சாலை, மாநில நெடுஞ்சாலை துறையினர் பராமரிப்பில் உள்ளது. தேர்வாய்கண்டிகை சிப்காட் மற்றும் புதிதாக வரவுள்ள மாநெல்லுார் சிப்காட் வளாகங்களை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையாக உள்ளது.
இச்சாலையில், சூரவாரிகண்டிகை சந்திப்பில், சாலையோரம் ஏராளமான கனரக லாரிகள் அணிவகுத்து நிறுத்தப்படுகின்றன. அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைக்கு வரும் வாகனங்கள், நிறுத்த இடமின்றி, நெடுஞ்சாலையோரம் நிறுத்துவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால், கவரைப்பேட்டை - சத்தியவேடு நெடுஞ்சாலை, விபத்து பகுதியாக மாறி வருகிறது.
எனவே, தொழிற்சாலைக்கு வரும் வாகனங்களுக்கு தனி இடம் ஒதுக்க வேண்டும்.
நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.