/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மப்பேடில் கற்கள் பெயர்ந்த சாலை அச்சத்தில் செல்லும் வாகன ஓட்டிகள்
/
மப்பேடில் கற்கள் பெயர்ந்த சாலை அச்சத்தில் செல்லும் வாகன ஓட்டிகள்
மப்பேடில் கற்கள் பெயர்ந்த சாலை அச்சத்தில் செல்லும் வாகன ஓட்டிகள்
மப்பேடில் கற்கள் பெயர்ந்த சாலை அச்சத்தில் செல்லும் வாகன ஓட்டிகள்
ADDED : நவ 07, 2025 12:18 AM

மப்பேடு: மப்பேடு பகுதியில் கீழச்சேரி செல்லும் சாலை சேதமடைந்து, கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் மப்பேடு மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட மப்பேடு ஊராட்சியில் இருந்து, கீழச்சேரி செல்லும் சாலை ஜல்லிகற்கள் பெயர்ந்து, மோசமான நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்குவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இச்சாலை வழியே, கீழச்சேரியில் உள்ள அரசு பள்ளிக்கு செல்லும் மாணவ --- மாணவியர் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இச்சாலை வழியாக இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளங்களில் சிக்கி காயமடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து, பலமுறை புகார் அளித்தும், ஒன்றிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மப்பேடு, கீழச்சேரி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.