/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையில் பாயும் ஊற்று நீர் வாகன ஓட்டிகள் அவதி
/
சாலையில் பாயும் ஊற்று நீர் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : நவ 07, 2025 12:18 AM

ஆர்.கே.பேட்டை: வயல் வெளியில் இருந்து சாலையின் குறுக்கே பாயும் ஊற்றுநீரால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், வங்கனுார் ஊராட்சிக்கு உட்பட்ட சிங்கசமுத்திரத்தில் சாலையின் குறுக்கே பாயும் ஊற்றுநீரால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சிங்கசமுத்திரத்தில் இருந்து அப்பல்ராஜிகண்டிகை செல்லும் சாலையை ஒட்டிய வயல்வெளியில் இருந்து ஊற்றுநீர், சாலையில் தொடர்ந்து பாய்கிறது.
இதனால் தார் சாலை சேதம் அடைந்துள்ளது. பாசி படர்ந்து வாகனங்கள் வழுக்கி விழும் நிலை உள்ளது.
மழைக்காலத்தில் இந்த ஊற்று நீர் பாய்கிறது. தொடர்ந்து சாலையில் பாயும் ஊற்று நீருக்கு வடிகால்வாய் கட்டப்பட வேண்டும்.
இந்த வடிகால்வாயுடன் சாலையின் மறுபக்கத்தில் உள்ள மழைநீர் கால்வாய்க்கு இணைப்பு ஏற்படுத்தினால் விவசாயிகள் பயனடைவர் என, பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

