/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வர்ணம் பூசாத வேகத்தடை அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
வர்ணம் பூசாத வேகத்தடை அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : நவ 02, 2024 02:06 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் ஊராட்சியில் பஜார் சாலை, தக்கோலம் நெடுஞ்சாலை, திருத்தணி சாலையில் பள்ளி, அரசு அலுவலகங்கள் மற்றும் வளைவு சாலைகள் உள்ளன. இந்நிலையில், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை நலன் கருதி, 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு அரசு மேல்நிலைப் பள்ளி, தேசிய நெடுஞ்சாலை இணைப்பு சாலை, காவல் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வேகத்தடைக்கு வெள்ளை நிற வர்ணம் அழிந்து உள்ளது.
வேகத்தடையின் மீது இரவில் ஒளி பிரதிபலிப்பான் ஒட்டப்படாமல் உள்ளதால், வேகமாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
குறிப்பாக, இரவு நேரத்தில் இப்பகுதியில் போதுமான வெளிச்சம் இல்லாததால், இருசக்கர வாகன ஓட்டிகள், வேகத்தடையை கவனிக்காமல் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குவதாக, அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும், பள்ளி மற்றும் மருத்துவமனை பகுதிகளில் வேகமாக வரும் வாகன ஓட்டிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, வேகத்தடைக்கு வெள்ளை நிற வர்ணம் பூசுவதோடு, இரவில் ஒளிரும் வகையில் ஒளி பிரதிபலிப்பான் அமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.