/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையை மறைத்து ஆட்டோக்கள் நெரிசலில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
சாலையை மறைத்து ஆட்டோக்கள் நெரிசலில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சாலையை மறைத்து ஆட்டோக்கள் நெரிசலில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சாலையை மறைத்து ஆட்டோக்கள் நெரிசலில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : நவ 14, 2024 01:55 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் இருந்து ரயில் நிலையம் செல்வதற்கு, ரயில் நிலைய சாலை, வசந்த பஜார் சாலை ஆகிய இரு சாலைகள் உள்ளன.
மேலும், அந்த சாலைகளில் நுாற்றுக்கணக்கான கடைகள் உள்ளன. குறுகிய இச்சாலைகள் வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான ரயில் பயணியர் மற்றும் அப்பகுதி மக்கள் சென்று வருகின்றனர்.
ரயில் பயணியரை ஏற்றிச் செல்வதற்காக, இரு சாலைகளை அடைத்தபடி, ஷேர் ஆட்டோக்கள் எப்போதும் நின்றிருக்கும். ஒரு ஆட்டோ நிரம்பியதும், அடுத்து ஆட்டோ அந்த இடத்தை பிடித்து நிற்பது வழக்கமாகி உள்ளது.
ரயில் நிலைய சாலை நுழைவாயிலில், நந்தி போல ஷேர் ஆட்டோக்கள் நிற்பதால், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
குறிப்பாக, பரபரப்பான காலை மற்றும் மாலை நேரத்தில், அவசரமாக ரயில் பிடிக்க செல்வோர், இச்சாலை நுழைவாயிலில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, ரயில்களை தவறவிடும் நிலை ஏற்படுவதாக ரயில் பயணியர் தெரிவிக்கின்றனர்.
கும்மிடிப்பூண்டி போக்குவரத்து போலீசார், ரயில் நிலைய சாலையை மறைத்தபடி நிறுத்தப்படும் ஷேர் ஆட்டோக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

