/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நடுவுல கொஞ்சம் சாலையை காணோம் ஒரு மாதமாக வாகன ஓட்டிகள் அச்சம்
/
நடுவுல கொஞ்சம் சாலையை காணோம் ஒரு மாதமாக வாகன ஓட்டிகள் அச்சம்
நடுவுல கொஞ்சம் சாலையை காணோம் ஒரு மாதமாக வாகன ஓட்டிகள் அச்சம்
நடுவுல கொஞ்சம் சாலையை காணோம் ஒரு மாதமாக வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : ஏப் 03, 2025 02:36 AM

திருத்தணி:திருத்தணி - பொதட்டூர்பேட்டை செல்லும் மாநில நெடுஞ்சாலையில் பாபிரெட்டிப்பள்ளி, தெக்களூர், சூர்யநகரம், கிருஷ்ணசமுத்திரம், புச்சிரெட்டிப்பள்ளி, கீச்சலம், பொதட்டூர்பேட்டை உட்பட, 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இச்சாலை வழியாக, தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருக்கும். இந்நிலையில், திருத்தணி - பொதட்டூர்பேட்டை மாநில நெடுஞ்சாலையை, திருத்தணி நெடுஞ்சாலை துறையினர் பராமரித்து வருகின்றனர்.
இச்சாலையை முறையாக பராமரிக்காததால், ஒரு மாதத்திற்கு மேலாக தெக்களூர் ஏரிக்கரை நெடுஞ்சாலை சேதமடைந்துள்ளன. மொத்தம் 600 மீ., துாரமுள்ள ஏரிக்கரை சாலையில், தார்ச்சாலை பெயர்ந்து ஜல்லிக் கற்களாக மாறியுள்ளன.
மேலும், ஏரிக்கரை சாலையில் கனரக வாகனங்கள் மற்றும் டாரஸ் லாரிகள் அதிக எடையுடன் செல்வதால், சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி தவிக்கின்றனர்.
மேலும், அனைத்து வாகன ஓட்டிகளும், தெக்களூர் ஏரிக்கரை சாலையை அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். குறிப்பாக, எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும் போது விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

