/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெடுஞ்சாலையோர தடுப்பு சேதம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
நெடுஞ்சாலையோர தடுப்பு சேதம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
நெடுஞ்சாலையோர தடுப்பு சேதம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
நெடுஞ்சாலையோர தடுப்பு சேதம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : பிப் 09, 2025 12:28 AM

திருவாலங்காடு:சென்னை --- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூர் அடுத்து அமைந்துள்ளது கனகம்மாசத்திரம், ராமஞ்சேரி, புதுார் கிராமங்கள். இப்பகுதியில், அதிக வளைவு உள்ளதால் வாகன ஓட்டிகள், வாகனத்தை முந்தி செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்து எதிரே வரும் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகி தவித்து வந்தனர்.
இதை கருத்தில் கொண்ட, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர், மூன்றாண்டுகளுக்கு முன், கனகம்மாசத்திரம், ராமஞ்சேரி மற்றும் புதுார் கிராமத்தில் வளைவு சாலைகளில் இரும்பு தடுப்புகள் மற்றும் ரிப்ளக்டர் போன்றவற்றை அமைத்தனர்.
இதனால்,தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்கள் ஓரளவு தடுக்கப்பட்டது. இந்நிலையில், சில மாதங்களாக கனகம்மாசத்திரம், ராமஞ்சேரி, புதுார் கிராமங்களில் சாலையோர தடுப்புகள் உடைந்து விழுந்துள்ளன.
வாகன ஓட்டிகளின் நலன் கருதி, உடைந்து விழுந்துள்ள தடுப்புகளை மீண்டும் பொருத்தி விபத்துக்களை தடுக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.