/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெடுஞ்சாலையில் வேகத்தடை இல்லாததால் ஸ்ரீபெரும்புதுாரில் சிக்கும் வாகன ஓட்டிகள்

ADDED : ஜன 27, 2025 02:26 AM

கடம்பத்துார்:திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட மேல்நல்லாத்துார் ஊராட்சி. இப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலையோரம் ஊராட்சி அலுவலகம், அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் மப்பேடு, மணவாள நகர் காவல் நிலையம் செல்லும் நெடுஞ்சாலை சந்திப்பு பகுதிகள் உள்ளன.
இந்த நெடுஞ்சாலை வழியே, தினமும் 25,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றனர். இந்த நெடுஞ்சாலையில், வேகத்தடை இல்லாததால், அரசு பள்ளிக்கு வரும் மாணவ - மாணவியர், ஊராட்சிக்கு வரும் பயனாளிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும், நெடுஞ்சாலையில் மப்பேடு, மணவாள நகர் காவல் நிலையம் செல்லும் சந்திப்பு பகுதிக்கு வரும் மற்றும் செல்லும் வாகனங்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றன.
சில நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகின்றன.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் ஊராட்சி அலுவலகம் அருகே, மணவாள நகர் காவல் நிலையம் செல்லும் சாலை சந்திப்பு மற்றும் அரசு பள்ளி அருகே வேகத்தடை அமைக்க வேண்டும் என, மேல்நல்லாத்துார் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.