/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தரைப்பாலத்தின் இணைப்பு சாலை உள்வாங்குவதால் வாகன ஒட்டிகள் அவதி
/
தரைப்பாலத்தின் இணைப்பு சாலை உள்வாங்குவதால் வாகன ஒட்டிகள் அவதி
தரைப்பாலத்தின் இணைப்பு சாலை உள்வாங்குவதால் வாகன ஒட்டிகள் அவதி
தரைப்பாலத்தின் இணைப்பு சாலை உள்வாங்குவதால் வாகன ஒட்டிகள் அவதி
ADDED : பிப் 06, 2025 01:23 AM

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு நகரில் இருந்து, சோளிங்கர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கரலம்பாக்கம் கிராமம்.
இந்த கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி எதிரே, சாலையின் குறுக்கே தரைப்பாலங்கள் இரண்டு உள்ளன. இந்த பாலங்கள் சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டன.
தரைப்பாலங்களுக்கு இணைப்பு சாலையும் அமைக்கப்பட்டன. இணைப்பு சாலையின் அடித்தளம் உறுதியாக கெட்டிப்படுத்தப்படாத நிலையில், தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது, இந்த இணைப்பு சாலை, பாலத்தின் உயரத்தை விட மண்ணில் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால், இந்த தரைப்பாலத்தை கடக்கும் வாகனங்கள் தூக்கி வீசப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த வழியாக பயணிக்கும் வாகனங்கள், தரைப்பாலத்தைக் கடக்கும் போது நிலை குலைந்து போகின்றன. வாகனங்கள் கட்டுப்பாட்டை மீறி விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தரைப்பாலத்திற்கு இணையாக இணைப்பு சாலையை உறுதியாக அமைக்க வேண்டும் என, பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.