/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வடமங்கலம் சாலை சேதம் வாகன ஓட்டிகள் அவதி
/
வடமங்கலம் சாலை சேதம் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஆக 31, 2025 02:40 AM

வயலுார்:வயலுார் பகுதியில் சேதமடைந்த நெடுஞ்சாலையால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடம்பத்துார் ஒன்றியத்தில் வயலுார் ஊராட்சி அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள உளுந்தை - வடமங்கலம் நெடுஞ்சாலையில், தினமும் 3,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இச்சாலை பல இடங்களில் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால், இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

