/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சோளிங்கரில் பழுதான சிக்னல் வாகன ஓட்டிகள் அவதி
/
சோளிங்கரில் பழுதான சிக்னல் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : நவ 22, 2024 01:03 AM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டையில் இருந்து சோளிங்கருக்கு நெடுஞ்சாலை வசதி உள்ளது. இந்த மார்க்கமாக தினசரி நுாற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் பயணிக்கின்றன.
இதில், வெள்ளாத்துார் ஓடை கரையை ஒட்டி, சிக்கலான சாலை திருப்பம் அமைந்துள்ளது. இதனால், விபத்துகள் ஏற்பட்டு வந்தன. வசாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி, கடந்த ஆண்டு இந்த பகுதியில் எல்.இ.டி., சிக்னல் விளக்கு பொருத்தப்பட்டது. இதையடுத்து, இரவு பகல் எந்நேரமும், வாகன ஓட்டிகள் விழிப்புடன் இந்த பகுதியை கடந்து செல்ல முடிகிறது.
இந்நிலையில், இந்த சிக்னல் கம்பங்களில் தெற்கு பகுதியில் உள்ள கம்பம் ஒன்று, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சேதம் அடைந்தது. கம்பம் உருக்குலைந்து சாய்ந்து கிடக்கும் நிலையில், இதில் பொருத்தப்பட்டுள்ள சிக்னலும் செயல்படவில்லை. இதனால், விபத்து நேரிடும் அபாயம் உள்ளது. வாகனஓட்டிகளின் பாதுகாப்பு கருதி, இந்த சிக்னலை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.