/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கூட்டு சாலையில் செயல்படாத சிக்னல் கீச்சலத்தில் வாகன ஓட்டிகள் அவதி
/
கூட்டு சாலையில் செயல்படாத சிக்னல் கீச்சலத்தில் வாகன ஓட்டிகள் அவதி
கூட்டு சாலையில் செயல்படாத சிக்னல் கீச்சலத்தில் வாகன ஓட்டிகள் அவதி
கூட்டு சாலையில் செயல்படாத சிக்னல் கீச்சலத்தில் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : நவ 06, 2025 09:38 PM
பள்ளிப்பட்டு: கூட்டு சாலையில் செயல்படாத சிக்னல் விளக்குகளால் வாகன ஓட்டிகள் விபத்து அவதிப் பட்டு வருகின்றனர்.
பொதட்டூர்பேட்டையில் இருந்து திருத்தணி செல்லும் மார்க்கத்தில் அமைந்துள்ளது கீச்சலம் மற்றும் புது கீச்சலம் கிராமங்கள். இந்த கிராமங்களில் அதிகளவில் சாலை திருப்பங்கள் உள்ளன.
இதில், கீச்சலம் கிராமத்தின் புறவழி சாலையாக புதுகீச்சலம் வழியாக மாற்றுப்பாதை அமைந்துள்ளது. இந்த மாற்றுப்பாதையின் சந்திப்பில், வேகமாக வரும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படுகின்றன.
விபத்துகளை தவிர்க்கும் விதமாக இந்த சாலை சந்திப்பில் சிக்னல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. கடந்த சில வாரங்களாக இந்த சிக்னல் விளக்கு செயல்படவில்லை. இதனால், சாலை சந்திப்பை அறியாமல் வேகமாக வரும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படுகின்றன.
புதிதாக இந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள், சாலை சந்திப்பை அறியாமல் வேகமாக வருவதால் விபத்து நேரிடும் அபாயம் உள்ளது. வாகன ஓட்டிகள் மற்றும் பகுதி மக்களின் பாதுகாப்பு கருதி, இங்குள்ள சிக்னல் விளக்குகளை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.