/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சென்னை-- பெங்களூரு நெடுஞ்சாலையில் நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
/
சென்னை-- பெங்களூரு நெடுஞ்சாலையில் நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
சென்னை-- பெங்களூரு நெடுஞ்சாலையில் நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
சென்னை-- பெங்களூரு நெடுஞ்சாலையில் நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : செப் 05, 2025 02:18 AM

திருமழிசை:சென்னை- -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஐந்து நிமிடத்தில் கடக்க வேண்டிய சாலையை அரை மணி நேரத்திற்கு மேலாக கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில் தினமும் ஒரு லட்சத்திற்கு அதிகமான வானங்கள் சென்று வருகின்றன.
நேற்று காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரை பெங்களூர் நோக்கி செல்லும் சாலையில் நசரத்பேட்டையிலிருந்து திருமழிசை சாலை திரும்பும் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இணைப்பு சாலைகளிலும் போக்குரவத்து நெரிசல் ஏற்பட்டதால் காலை நேரங்களில் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் வேலைக்கு செல்லும் பகுதி மக்கள் கடும் சிரமப்பட்டனர்.
இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறியதாவது :
சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில் காலை 8:00 மணி முதல் கடும் போக்குவரத்து நெரிசல ஏற்பட்டது. தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் வாகன போக்குவரத்து அதிகமாகி உள்ளது.
இன்று நடைபெறும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நேற்று கல்லுாரிகளில் மாணவ, மாணவியர் ஓணம் கொண்டாட்டத்தில் ஈடுபட தனித்தனியாக காரில் வந்தனர். பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்கள் வந்தாலே போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்படும்.
இவ்வாறு பலர் தங்கள் சொந்த வாகனங்களில் செல்வதால் சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நசரத்பேட்டை போக்குவரத்து சிக்னல் முதல் திருமழசை நெடுஞ்சாலை திரும்பும் பகுதி வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
காலை 10:00 மணிக்கு பிறகே போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது.
இவ்வாறு போலீசார் கூறினர்.