/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நல்லுார் இணைப்பு சாலையில் கழிவு துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகள் அவதி
/
நல்லுார் இணைப்பு சாலையில் கழிவு துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகள் அவதி
நல்லுார் இணைப்பு சாலையில் கழிவு துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகள் அவதி
நல்லுார் இணைப்பு சாலையில் கழிவு துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : டிச 13, 2025 06:04 AM

சோழவரம்: நல்லுார் இணைப்பு சாலையில், கழிவுகள் குவிந்து துர்நாற்றம் வீசுவதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின், சோழவரம் அடுத்த நல்லுார் பகுதியில் உள்ள இணைப்பு சாலை முழுதும் கழிவுகள் கொட்டி குவிக்கப்பட்டு உள்ளன.
கழிவுகளில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
வாகன ஓட்டிகள் கூறியதாவது:
இரவு நேரங்களில் உணவகங்களின் உணவு கழிவுகள், அழுகிய காய்கறிகள், பழங்கள் என, பல்வேறு கழிவுகள் மூட்டைகளில் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன.
பழுதுநீக்க, பரிசோதனை செய்ய என, நீண்டதுாரம் செல்லும் கனரக வாகனங்கள் இந்த இணைப்பு சாலையின் ஓரங்களில் நிற்கின்றன.
கழிவுகளில் இருந்து, பெரும் துர்நாற்றம் வீசுவதால், ஓட்டுநர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
சுகாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது. இங்குள்ள கழிவுகளை அகற்றவும், மீண்டும் கொட்டாமல் இருக்கவும், சோழவரம் ஒன்றிய நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.