/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பல்லாங்குழியாக மாறிய சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி
/
பல்லாங்குழியாக மாறிய சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி
பல்லாங்குழியாக மாறிய சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி
பல்லாங்குழியாக மாறிய சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி
ADDED : அக் 22, 2025 10:39 PM

வேப்பம்பட்டு: வேப்பம்பட்டு பகுதியில் சாலை சேதமடைந்து பல்லாங்குழியாக மாறியுள்ளதால், 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் அடுத்து 89 வேப்பம்பட்டு ஊராட்சி அமைந்துள்ளது. இங்குள்ள ரயில் நிலையத்திலிருந்து ஊராட்சி அலுவலக சாலையை, வேப்பம்பட்டு மற்றும் பெருமாள்பட்டு உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இச்சாலை சேதமடைந்து, பல்லாங்குழியாக மாறியுள்ளது. இதனால், பகுதி மக்கள் மற்றும் வாகனங்களில் செல்வார் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். தற்போது மழை பெய்து வருவதால், சேதமடைந்த சாலை சிறு குளம் போல் மாறியுள்ளது.
இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் வேப்பம்பட்டு பகுதியில் ஆய்வு செய்து, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

