/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கழிவுநீருடன் மழைநீர் தேக்கம் வாகன ஓட்டிகள் கடும் அவதி
/
கழிவுநீருடன் மழைநீர் தேக்கம் வாகன ஓட்டிகள் கடும் அவதி
கழிவுநீருடன் மழைநீர் தேக்கம் வாகன ஓட்டிகள் கடும் அவதி
கழிவுநீருடன் மழைநீர் தேக்கம் வாகன ஓட்டிகள் கடும் அவதி
ADDED : அக் 15, 2025 10:58 PM

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையில் வடிகால் வசதியின்றி, கழிவுநீருடன் மழைநீர் கலந்து தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி கன்னியம்மன் கோவில் பகுதியில், சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாலம் உள்ளது. அதன் கீழ் உள்ள இணைப்பு சாலைகளில், ஆந்திரா மார்க்கத்தில் உள்ள சாலையில், மழைநீர் வடிகால் வசதி இல்லை.
இதனால், மழைக்காலங்களில் குளம் போல் மழைநீர் தேங்கி நிற்பது வாடிக்கையாக உள்ளது. மேலும், அப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளின் கழிவுநீர் இணைப்பு, சாலையோரம் திறந்து விடப்படுகிறது.
கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இணைப்பு சாலையோரம் மழைநீருடன், கழிவுநீர் கலந்து தேங்கியுள்ளது. சாலையின் பெரும் பகுதியை தேங்கியிருப்பதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆய்வு செய்து, இணைப்பு சாலையோரம் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.