/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பேரணி
/
விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பேரணி
ADDED : அக் 15, 2025 10:57 PM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி தீயணைப்பு துறை சார்பில், விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வலியுறுத்தி, அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பேரணி நடந்தது.
கும்மிடிப்பூண்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் படை சார்பில், விபத்தில்லா தீபாவளி பண்டிகையை கொண்டாட வலியுறுத்தி, நேற்று விழிப்புணர்வு பேரணி நடந்தது.
தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயந்திரன் தலைமையில் நடந்த பேரணியில், கும்மிடிப்பூண்டி கே.எல்.கே., அரசினர் மேல்நிலைப்பள்ளியின் தேசிய மாணவர்கள் படை மாணவர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.
இதில், தீயணைப்பு வாகனமும் பங்கேற்றது. பள்ளியில் இருந்து துவங்கிய பேரணி, கும்மிடிப்பூண்டி பஜார் பகுதி முழுதும் சென்று திரும்பியது. பேரணியில் பங்கேற்ற மாணவர்கள், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி கோஷமிட்டு சென்றனர்.