/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாட்டுத்தொழுவமாக மாறிய வரதராஜபுரம் சாலை துர்நாற்றத்தால் வாகன ஒட்டிகள் கடும் அவதி

ADDED : ஜன 22, 2025 01:26 AM

திருமழிசை:சென்னை மதுரவாயல் முதல், வாலாஜா வரையிலான 98 கி.மீ., நீளச் சாலை, 2014ம் ஆண்டு, ஆறுவழிச் சாலையாக விரிவாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஒப்பந்தங்கள் விடப்பட்டு, 2018-ம் ஆண்டின் இறுதியில் பணிகள் துவங்கப்பட்டு நடந்து வருகின்றன.
இதில், சென்னை - பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில், திருமழிசை அடுத்த, வரதராஜபுரம் பகுதி மாட்டுத்தொழுவமாக மாறியுள்ளது.
மேலும், மாட்டுச்சாணம் குவிந்து இருப்பதால் ஏற்படும் துர்நாற்றத்தால் அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், இப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லுாரிக்கு வரும் மாணவ - மாணவியர் மற்றும் பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, மழை நேரங்களில், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
இதற்கு, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்காததே காரணம் என, வாகன ஒட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட பூந்தமல்லி ஒன்றிய அதிகாரிகள், சென்னை - பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில், திருமழிசை அடுத்த, வரதராஜபுரம் பகுதியில், ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.