/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சுரங்கப்பாதையில் 'மெகா' பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
சுரங்கப்பாதையில் 'மெகா' பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சுரங்கப்பாதையில் 'மெகா' பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சுரங்கப்பாதையில் 'மெகா' பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : ஜூன் 16, 2025 11:33 PM

திருத்தணி, திருத்தணி ஒன்றியம் முருக்கம்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே, தானியங்கி ரயில்வே கேட் பாதை இருந்தது. இந்த வழியாக மேல்முருக்கம்பட்டு, மோட்டூர், மங்காபுரம் வழியாக பொன்பாடி உட்பட பல்வேறு கிராமங்களுக்கு தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், ரயில்வே கேட்டை கடக்கும் போது, வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதிவாசிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வந்தனர். மேலும், ரயில்வே கேட் அடிக்கடி பழுதாகி விடுவதால், வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல், பல கி.மீ., துாரம் சுற்றி செல்ல வேண்டியிருந்தது.
இதையடுத்து, ரயில்வே நிர்வாகம் சார்பில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், 3.50 கோடி ரூபாய் மதிப்பில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. மேலும், ரயில்வே கேட்டும் நிரந்தரமாக மூடப்பட்டது.
தற்போது, கார், வேன், டிராக்டர், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை ரயில்வே சுரங்கப்பாதை வழியாக செல்கிறது.
சுரங்கப்பாதையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தில் அடிக்கடி இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
இது தொடர்பாக, பலமுறை வாகன ஓட்டிகள் பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, இனியாவது ரயில்வே நிர்வாகம் சுரங்கப்பாதையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.