/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழையனுார் சாலையை அகலப்படுத்த வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
/
பழையனுார் சாலையை அகலப்படுத்த வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
பழையனுார் சாலையை அகலப்படுத்த வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
பழையனுார் சாலையை அகலப்படுத்த வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
ADDED : அக் 31, 2025 07:46 PM
திருவாலங்காடு: குறுகலாக உள்ள பழையனுார் சாலையை அகலப்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
திருவாலங்காடு - பேரம்பாக்கம் நெடுஞ்சாலை மணவூர் வழியாக செல்கிறது. இச்சாலையில் பழையனுார், ராஜபத்மாபுரம், அண்ணாமலைபுரம் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
14 கி.மீ., உள்ள இச்சாலை 10 ஆண்டுகளுக்கு முன் 3 மீட்டர் அகலத்திற்கு அமைக்கப்பட்டது.
அப்போது பொது போக்குவரத்து மற்றும் வேன், கார், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகன போக்குவரத்து சாலையில் குறைவாக இருந்தது. தற்போது 24 மணிநேரமும் அதிக வாகனங்கள் செல்கின்றன.
குறுகிய சாலையால் அவ்வப்போது எதிரெதிர் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாவதும், வாகன ஓட்டிகள் காயமடைவதும் நிகழ்கிறது.
குறிப்பாக திருவாலங்காடு தேரடியில் இருந்து பழையனுார் வரையிலான சாலையில் கடைகள், வணிக வளாகங்கள் உள்ளதால் காலை, மாலை வேளைகளில் இருசக்கர வாகனம் கூட கடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
எனவே, குறுகிய அளவிலான இச்சாலையை அகலப்படுத்த, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

