/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மோவூர் காலனி சுடுகாட்டு பாதை சேதம்
/
மோவூர் காலனி சுடுகாட்டு பாதை சேதம்
ADDED : ஜன 11, 2025 11:46 PM

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த, மோவூர் கிராமத்தில் காலனி சுடுகாட்டுக்கு செல்லும் பாதை சேதமடைந்துள்ளதால், கிராமவாசிகள் சிரமப்படுகின்றனர்.
திருவள்ளூர் வட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது மோவூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில், மோவூர் கிராமம், காலனி மற்றும் மோவூர் கண்டிகை ஆகிய கிராமங்கள் அடங்கியுள்ளன. இங்கு, 1,100 பேர் வசித்து வருகின்றனர்.
இதில், காலனிவாசிகளுக்காக தனி சுடுகாடு உள்ளது. கிராமத்தில் இருந்து இந்த சுடுகாட்டுக்கு செல்லும் பாதை குண்டும் குழியுமாக உள்ளது.
மழை காலத்தில் இச்சாலையில் மழைநீர் தேங்கி விடுவதால், இறந்தவர்களை கொண்டு செல்ல, கிராமவாசிகள் கடும் சிரமப்படுகின்றனர்.
எனவே, சேதமடைந்த சுடுகாட்டு பாதையை ஒன்றிய நிர்வாகம் சீரமைக்க வேண்டும் என, கிராமவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.