/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாநகர பேருந்து பணிமனை திட்டம் 'அம்போ' அதிகாலை பேருந்துக்கு அல்லல்படும் பயணியர்
/
மாநகர பேருந்து பணிமனை திட்டம் 'அம்போ' அதிகாலை பேருந்துக்கு அல்லல்படும் பயணியர்
மாநகர பேருந்து பணிமனை திட்டம் 'அம்போ' அதிகாலை பேருந்துக்கு அல்லல்படும் பயணியர்
மாநகர பேருந்து பணிமனை திட்டம் 'அம்போ' அதிகாலை பேருந்துக்கு அல்லல்படும் பயணியர்
ADDED : நவ 15, 2024 08:44 PM
திருவள்ளூர்:திருவள்ளூரில் மாநகர பேருந்து பணிமனை இல்லாததால், அதிகாலையில் சென்னைக்கு பேருந்துகள் இல்லாமல் பயணியர் அவதிப்படுகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில், 250க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இம்மாவட்டத்தில் இருந்து பலரும், வேலை, மருத்துவம், பள்ளி, கல்லுாரி மற்றும் அத்தியாவசிய தேவைக்காக, சென்னைக்கு சென்று வருகின்றனர்.
கடந்த, 2009 முதல் சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள் இம்மாவட்டத்திற்கு இயக்கப்பட்டு வருகின்றன. வடபழனி, தாம்பரம், ஆவடி, அம்பத்துார், பிராட்வே, தி.நகர், கோயம்பேடு, ஸ்ரீபெரும்புதுார், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆரம்பத்தில் 54 பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதனால், திருவள்ளூர் மாவட்ட மாணவர், ஊழியர் மற்றும் பொதுமக்கள் பயனடைந்து வந்தனர். ஆனால், திருவள்ளூரில் மாநகர பேருந்து பணிமனை இதுவரை அமைக்காததால், தற்போது, பூந்தமல்லி, அம்பத்துார், ஆவடி, கே.கே.நகர், பாடியநல்லுார் பகுதிகளில் இருந்து தான் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இதனால், திருவள்ளூரில் இருந்து காலை 6:30 மணிக்கு மேல் தான் சென்னைக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும், இரவு, 8:00 மணி வரை மட்டுமே மாநகர பேருந்து சேவை உள்ளது. காரணம், திருவள்ளூரில் மாநகர பேருந்து பணிமனை இல்லாததே. இதையடுத்து, கடந்த, பணிமனைக்காக 2013ல் திருவள்ளூர் அடுத்த அம்மணம்பாக்கம் கிராமத்தில், 5.5 ஏக்கர் நிலம் அரசு ஒதுக்கீடு செய்தது.
இடம் ஒதுக்கி 11 ஆண்டுகளாகியும், இதுவரை அங்கு, பணிமனை கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால், அதிகாலை நேரத்தில் சென்னைக்கு செல்வோர், கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதுகுறித்து, சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் கூறியதாவது:
மாநகர போக்குவரத்துக் கழக பணிமனைக்காக அம்மணம்பாக்கம் கிராமத்தில், 5.5 ஏக்கர் நிலம், ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. போதிய நிதி இல்லாததால், பணிமனை அமைக்கும் பணி துவங்கவில்லை. அரசிடம் நிதி கேட்டு கோரிக்கை விடுத்துள்ளோம். நிதி கிடைத்ததும், பணிமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.