/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பிளாஸ்டிக் கழிவு தரம் பிரித்து விற்பனை செய்ய நகராட்சி முடிவு
/
பிளாஸ்டிக் கழிவு தரம் பிரித்து விற்பனை செய்ய நகராட்சி முடிவு
பிளாஸ்டிக் கழிவு தரம் பிரித்து விற்பனை செய்ய நகராட்சி முடிவு
பிளாஸ்டிக் கழிவு தரம் பிரித்து விற்பனை செய்ய நகராட்சி முடிவு
ADDED : நவ 15, 2024 01:47 AM

திருவள்ளூர்:நகரில் சேகரமாகும் பிளாஸ்டிக் கழிவை தரம் பிரித்து, விற்பனை செய்ய நகராட்சி முடிவு செய்துள்ளது.
திருவள்ளூர் நகராட்சியில் 27 வார்டுகளில், 82,000 பேர் வசித்து வருகின்றனர். வீடுகளில் இருந்து குப்பையினை சேகரிக்க, தனியார் நிறுவன ஊழியர் 162 பேர் உள்ளனர். தினமும் வீடுகளில் இருந்து மக்கும், மக்காத குப்பை 25 ஆயிரம் கிலோ வரை சேகரிக்கப்படுகிறது.
மக்கும் குப்பையை உரக்குடில்கள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும் இடங்களிலும் கொண்டு செல்லப்படுகிறது. இதில், தினமும் 10 ஆயிரம் கிலோ மக்காத பிளாஸ்டிக் கழிவு சேகரமாகிறது.
இதில், 3,000 கிலோ பிளாஸ்டிக் கழிவை, துப்புரவு ஊழியர்கள் விற்பனை செய்து வருகின்றனர். விற்பனைக்கு லாயக்கற்ற 7,000 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் கழிவு நகராட்சி அலுவலகம் பின்புறம் மற்றும் ஈக்காடு சாலை ஆகிய இடங்களில், தரம் பிரித்து, வைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து நகராட்சி சுகாதார அலுவலர் மோகன் கூறியதாவது:
பிளாஸ்டிக் கழிவை தெருவில் வீசாமல், குப்பை சேகரிக்க வருவோரிடம் ஒப்படைக்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பள்ளி குழந்தைகளிடமும், விழிப்புணர்வு ஏற்படுத்தி, தெர்மாகூல் கழிவு 240 கிலோ பெறப்பட்டு, அதை 8,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
விற்பனை செய்ய இயலாத பிளாஸ்டிக் கழிவை, நிறுவனங்களுக்கு இதுவரை இலவசமாக வழங்கி வந்தோம்.
இனி, பிளாஸ்டிக் கழிவுகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். இதன் வாயிலாக கிடைக்கும் பணத்தை, தனியாக வங்கி கணக்கு தொடங்கி, சேமிக்கப்பட்டு, ஆண்டு தோறும் துப்புரவு ஊழியர்களுக்கு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.