/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சினிமா பார்க்க சென்ற வாலிபர் கொலையா? போலீசார் விசாரணை
/
சினிமா பார்க்க சென்ற வாலிபர் கொலையா? போலீசார் விசாரணை
சினிமா பார்க்க சென்ற வாலிபர் கொலையா? போலீசார் விசாரணை
சினிமா பார்க்க சென்ற வாலிபர் கொலையா? போலீசார் விசாரணை
ADDED : மார் 14, 2024 08:02 PM
அரக்கோணம்:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி, 25. இவர் சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த, 12ம் தேதி தன் பிறந்த நாளையொட்டி சென்னையில் இருந்து அரக்கோணம் வந்தார்.
வீட்டிற்கு வந்து பிறந்த நாள் கொண்டாடிய அன்றைய இரவு நண்பர்களுடன் சினிமா பார்க்க செல்வதாக பெற்றோரிடம் கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் நேற்று காலை அரக்கோணம் ஜெய்பீம் நகர் பகுதியில் தண்டவாளம் அருகே மரத்தில் துாக்கில் தொங்கியபடி இளைஞர் சடலமாக இருப்பதை கண்டவர்கள் அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். அரக்கோணம் காந்திநகர் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பது தெரிந்தது.
சடலத்தை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் பாலாஜி கொலை செய்யப்பட்டாரா அல்லது துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர்.

