ADDED : ஜன 24, 2025 07:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி மலைக்கோவில் இருந்து, உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மலைப் படிகள் வழியாக, மேல்திருத்தணிக்கு நேற்று சுமைத்தாரர்கள் துாக்கி வந்தனர்.
பின், அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் உற்சவர் முருகன் எழுந்தருளி, அகூர் கிராமத்திற்கு, மதியம், 2:00 மணிக்கு சென்றடைந்தார்.
பின், அங்குள்ள பெருமாள் கோவிலில், மாலை 5:00 மணிக்கு உற்சவர் முருகப் பெருமானுக்கு விபூதி, பால், பன்னீர், மஞ்சள் இளநீர் மற்றும் பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. பின், மாலை 6:00 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
அதை தொடர்ந்து, மாட்டு வண்டியில் அகூர் கிராம வீதிகளில் உற்சவர் முருகப்பெருமான் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்,