/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி நகரில் வரும் 16ல் முருகர் வீதியுலா
/
திருத்தணி நகரில் வரும் 16ல் முருகர் வீதியுலா
ADDED : ஜன 12, 2025 08:42 PM
திருத்தணி:திருத்தணியில், ஆண்டுதோறும், காணும் பொங்கல் தினத்தன்று, உற்சவர் முருகப்பெருமான், மலைக்கோவிலில் இருந்து, படிகள் வழியாக வந்து, திருத்தணி நகர் முழுதும் வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
மாலை 6:00 மணிக்கு ரெட்டிக்குளம் மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு விபூதி, பால், இளநீர், பஞ்சாமிர்தம் உட்பட பல்வேறு வகையான அபிஷேகம் நடைபெறும்.
அதை தொடர்ந்து அங்கிருந்து சிறப்பு அலங்காரத்தில் மாட்டு வண்டியில் மீண்டும் வீதியுலா மற்றும் இரவு 10:00 மணிக்கு முருகன், மலைக்கோவிலுக்கு சென்றடைவார்.
அந்த வகையில், நடப்பாண்டில், வரும் 16ம் தேதி, காணும் பொங்கல் விழாவையொட்டி, உற்சவர் முருகப்பெருமான் திருத்தணி நகர வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.