/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கடலில் மூழ்கிய மாயமான சிறுமி 5 நாளுக்கு பின் சடலமாக மீட்பு
/
கடலில் மூழ்கிய மாயமான சிறுமி 5 நாளுக்கு பின் சடலமாக மீட்பு
கடலில் மூழ்கிய மாயமான சிறுமி 5 நாளுக்கு பின் சடலமாக மீட்பு
கடலில் மூழ்கிய மாயமான சிறுமி 5 நாளுக்கு பின் சடலமாக மீட்பு
ADDED : ஜன 22, 2025 01:41 AM
செய்யூர்:இடைக்கழிநாடு பேரூராட்சி, சேம்புலிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஹாசினி, 13, என்ற சிறுமி, கடந்த 17ம் தேதி மாலை குடும்பத்துடன், கடப்பாக்கம் முகத்துவாரம் பகுதியில் குளித்தார். அப்போது, கடலில் மூழ்கி மாயமானார்.
தகவலின்படி வந்த சூணாம்பேடு போலீசார், கடப்பாக்கம் பகுதி மீனவர்கள் மற்றும் கடலோர காவல் படையினருடன் இணைந்து சிறுமியை தேடி வந்தனர்.
சிறுமியை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்கும்படி, கடந்த 19ம் தேதி காலை, அவரது உறவினர்கள், கிராம மக்கள் என 200க்கும் மேற்பட்டோர், கடப்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் செய்தனர்.
செய்யூர் தாசில்தார் சரவணன் பேச்சு நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக கூறியதும் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் நேற்று காலை, மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் பகுதியில் அடையாளம் தெரியாத சிறுமி சடலம் கடலில் மிதந்துள்ளது. மீனவர் 'வாட்ஸாப்' குழு தகவலின் படி, பூம்புகார் அருகே பெருந்தோட்டம் பகுதியில் இருந்து சிறுமியின் சடலத்தை கடலோர காவல்படையினர் மீட்டனர்.