/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தாழம்பூ புதர் தீ வைத்து அழிப்பு மர்ம நபர்கள் அட்டகாசம்
/
தாழம்பூ புதர் தீ வைத்து அழிப்பு மர்ம நபர்கள் அட்டகாசம்
தாழம்பூ புதர் தீ வைத்து அழிப்பு மர்ம நபர்கள் அட்டகாசம்
தாழம்பூ புதர் தீ வைத்து அழிப்பு மர்ம நபர்கள் அட்டகாசம்
ADDED : மார் 15, 2024 07:51 PM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த அத்திமாஞ்சேரிப்பேட்டையில், பள்ளிப்பட்டு சாலையை ஒட்டி, கன்னியம்மன் கோவில் அமைந்துள்ளது.
கோவிலுக்கு வடக்கில் குளம் ஒன்றும் அமைந்துள்ளது. இந்த குளக்கரையில், அரிய இனமான தாழம்பூ வளர்ந்து வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக வளர்ந்து வந்த இந்த தாழம்பூ செடிகள், தற்போது நன்கு வளர்ந்து புதராகக் காணப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் மர்ம நபர்கள் சிலர், இந்த செடியின் மகிமை தெரியாமல் தீ வைத்து அழித்துள்ளனர்.
ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில் தாழம்பூ செடிகள் முற்றிலுமாக அழிந்து விட்டன. பள்ளிப்பட்டு அடுத்த மதிகெட்டான் ஓடை மற்றும் நெடியம் ஆற்றங்கரை பகுதியில் மட்டுமே அரிதாகக் காணப்படுகின்றன. நீரோடைகளின் கரைகளில் மட்டுமே வளரும் தாழம்பூ செடிகள், அத்திமாஞ்சேரிப்பேட்டையில் குளக்கரையில் வளர்ந்து வந்தது சிறப்பு. தாழம்பூ புதரை தீ வைத்து அழித்துள்ளதால், இயற்கை ஆர்வலர்களும், பக்தர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

