/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குறுகலான கால்வாய் பாலம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
/
குறுகலான கால்வாய் பாலம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
ADDED : மே 30, 2025 02:27 AM

மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியில் இருந்து, காட்டுப்பள்ளி துறைமுகம், வடசென்னை அனல் மின் நிலையங்களுக்கு செல்லும் சாலையில், பழவேற்காடு ஏரிக்கு மழைநீர் செல்லும் கால்வாயின் குறுக்கே உள்ள பாலம் குறுகலாக உள்ளது.
சாலை அகலமாகவும், பாலம் குறுகலாகவும் இருப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர்.
மேலும், பாலத்தின் ஒரு புறம் தடுப்புச்சுவர் இல்லாமல் உள்ளது.
இதனால், வாகனங்கள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
பாலம் அமைந்துள்ள பகுதி குறுகலாக இருப்பதால் தடுமாறுகிறோம். எச்சரிக்கை பலகை, ஒளிரும் விளக்குகள் எதுவும் இங்கு இல்லை. குறுகிய பாலத்தை விரிவுபடுத்தி,தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.