/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தேசிய பேஸ்பால் போட்டி: சென்னை சிறுவர்கள் தேர்வு
/
தேசிய பேஸ்பால் போட்டி: சென்னை சிறுவர்கள் தேர்வு
ADDED : டிச 17, 2024 12:41 AM
சென்னை, தேசிய அளவில் நடக்க உள்ள, பேஸ்பால் போட்டியில் பங்கேற்கும் தமிழக அணியில், சென்னை சிறுவர்கள் மூன்று பேர் இடம் பெற்றுள்ளனர்.
இந்திய பள்ளி விளையாட்டு சம்மேளனம் சார்பில், 68வது தேசிய பேஸ்பால் போட்டி, சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் நகரில், வரும் 19ம் தேதி துவங்கி, 22ம் தேதி வரை நடக்கிறது. 14 வயதினருக்கான இப்போட்டியில், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, இருபாலர் அணிகள் பங்கேற்கின்றன.
போட்டியில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் பங்கேற்கும், தமிழகம்அணியில், 16 சிறுவர்கள் உள்ளனர்.
அதில், சென்னையை சேர்ந்த செயின்ட் மார்க்ஸ் பள்ளியின் பிரயாக், தி.நகர் எம்.சி.என்., பள்ளியின் சர்வேஸ்வரன், திருவொற்றியூர் நேரு பார்க் பள்ளியின் தட்சிணாமூர்த்தி ஆகிய மூன்று பேர் இடம் பெற்றுள்ளனர்.