/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தேசிய எலும்பு மூட்டு நலம் விழிப்புணர்வு மனித சங்கிலி
/
தேசிய எலும்பு மூட்டு நலம் விழிப்புணர்வு மனித சங்கிலி
தேசிய எலும்பு மூட்டு நலம் விழிப்புணர்வு மனித சங்கிலி
தேசிய எலும்பு மூட்டு நலம் விழிப்புணர்வு மனித சங்கிலி
ADDED : ஆக 04, 2025 11:06 PM

திருவள்ளூர், தேசிய எலும்பு மூட்டு வாரத்தை முன்னிட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு மனித சங்கிலி நடந்தது.
திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், தேசிய எலும்பு மற்றும் மூட்டு நல வாரம், கடந்த 3ம் தேதி துவங்கி, வரும் 10ம் தேதி வரை அனுசரிக்கப்பட்டு வருகிறது.
எலும்பு மற்றும் மூட்டு நோயியல் துறை சார்பில், நேற்று மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி நடந்தது.
மருத்துவமனை டீன் ரேவதி, துறை தலைவர் கோசலராமன் ஆகியோர் மனித சங்கிலியை துவக்கி வைத்தனர். இதில், துணை முதல்வர் திலகவதி, மருத்துவர்கள் பிரபுசங்கர், சரத்பாபு, ஜெகதீஸ்குமார் மற்றும் செவிலியர்கள், மாணவ - மாணவியர் என, 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இன்று, 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. நாளை, திருவள்ளூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள முதியோர் இல்லத்தில் தங்கியுள்ளோருக்கு, சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது.
வரும் 7ம் தேதி, எலும்பு மூட்டு ஆரோக்கியம் குறித்த மருத்துவ மற்றும் செவிலிய மாணவர்களுக்கு, ஓவியம், வாசக போட்டி நடக்கிறது.