தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/தேசிய தொழிற் பழகுனர் முகாம்

தேசிய தொழிற் பழகுனர் முகாம்

தேசிய தொழிற் பழகுனர் முகாம்


UPDATED : நவ 06, 2026 07:31 PM

ADDED : நவ 06, 2026 05:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:31 PM ADDED : நவ 06, 2026 05:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், வரும் 16ல் தேசிய தொழிற்பழகுனர் முகாம் நடைபெற உள்ளதாக, கலெக்டர் கவிதா தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் கலெக்டர் கவிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், பல்வேறு தொழிற்பிரிவுகளை சேர்ந்த பயிற்சியாளர்களுக்கு, பிரதமர் தேசிய தொழில் பழகுனர் முகாம், வரும் 16ம் தேதி காலை 9:00 மணியளவில் நடைபெற உள்ளது.

மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளை கொண்டு நடத்தப்பட உள்ள முகாமில், ஐ.டி.ஐ., எட்டு, 10 மற்றும் பிளஸ் 2, பட்டதாரிகள் பங்கேற்கலாம். பயிற்சி பெறுவோருக்கு, மத்திய அரசின் ‘நாக்’ சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும், விவரங்களுக்கு, ‘உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், திருவள்ளூர்’ என்ற முகவரியிலோ, dstotvlr2025@gmail.com என்ற மின்னஞ்சல் மற்றும் 94990 55663, 94450 90653, 96770 52117 ஆகிய மொபைல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us