/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தேசிய இளைஞர் சாகச விருது விண்ணப்பிக்க அழைப்பு
/
தேசிய இளைஞர் சாகச விருது விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூன் 29, 2025 09:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:தேசிய இளைஞர் சாகச விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
மத்திய அரசின் சார்பில் 2024 ம் ஆண்டிற்கு 'டென்சிங் நார்கே' தேசிய சாகச விருது வழங்கப்பட உள்ளது. இளம் வயதில் வீர தீர செயல்புரிந்தோர், பிற உயிர்களை காப்பாற்றியோர், ராணுவம், கடற்படை, விமானப்படையில் வீர தீர செயல்புரிந்தோர் உள்ளிட்டதகுதியுடைவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விருது பெறுபவர்களுக்கு 15 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும். தகுதியுடையோர், தங்களது விண்ணப்பத்தை https://awards.gov.in என்ற இணையளத்தில், இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.