/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கடம்பத்துார், பழவேற்காடில் அலட்சியம் பேனர், விளம்பரம் அழிப்பதில் மெத்தனம்
/
கடம்பத்துார், பழவேற்காடில் அலட்சியம் பேனர், விளம்பரம் அழிப்பதில் மெத்தனம்
கடம்பத்துார், பழவேற்காடில் அலட்சியம் பேனர், விளம்பரம் அழிப்பதில் மெத்தனம்
கடம்பத்துார், பழவேற்காடில் அலட்சியம் பேனர், விளம்பரம் அழிப்பதில் மெத்தனம்
ADDED : மார் 17, 2024 11:06 PM

திருவள்ளூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி பகுதியில், பொது இடங்கள், அரசு கட்டடங்கள், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோர தடுப்புகளில், அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள் ஏராளமான இருந்தன.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், அனைத்து கட்சி சுவரொட்டிகளை கிழிக்கவும், சுவர் விளம்பரங்களை வெள்ளையடித்து அழிக்கவும், அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி பகுதியில், சுவரொட்டிகளை கிழித்து, சுவர் விளம்பரங்களில் வெள்ளையடிக்கும் பணியில், நேற்று நாள் முழுதும் உள்ளாட்சி நிர்வாக ஊழியர்கள் ஈடுபட்டனர். அத்துடன் கட்சி சங்க பலகை, கொடி கம்பத்தில் கீழ் உள்ள கட்சி கல்வெட்டுகளை பேப்பர் ஒட்டி மறைத்தனர்.
ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் நேற்று ஆரணி ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள பாலத்தின் இரு பக்கமும் கட்சி விளம்பரங்கள் இருந்தன. அவை சுண்ணாம்பு மூலம் மறைக்கப்பட்டன. தனியார் கட்டடங்களில் உள்ள விளம்பர போஸ்டர் அழிக்கும் பணி நடந்தது.
நேற்று முன்தினம் மாலை திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலங்களில் வைக்கப்பட்டிருந்த, அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள் அகற்றப்பட்டன. மேலும், செய்தி மக்கள் தொடர்பு துறையின், விளம்பர வாகனத்தில் இருந்த கட்சி தலைவர்கள் படம், பேப்பர் ஒட்டி மறைக்கப்பட்டது.
இந்நிலையில், கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட 43 ஊராட்சிகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தாதது சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் ஊராட்சி மன்ற அலுவலங்கள், பெட்ரோல் பங்குகள், சாலையோர விளம்பர பதாகைகள், கொடிக்கம்பங்கள் அரசு பள்ளிகளில் முதல்வர் படத்தோடு வைக்கப்பட்டுள்ள காலை உணவு திட்டம் மற்றும் நெடுஞ்சாலையோரங்களில் முதல்வர் படத்துடன் சாலை விரிவாக்க திட்டம் உட்பட பல விளம்பரங்கள் மறைக்கப்படாமல் உள்ளன. மணவாளநகர் பகுதியில் பலவகையான விளம்பர பதாகை மறைக்கப்படாமல் உள்ளது. பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்த கட்சி கொடிக்கம்பங்கள், அரசியல் கட்சிகளின் விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டன. சேர்மன் அலுவலக அறை பூட்டப்பட்டது. அவர் பயன்படுத்தி வந்த பொலிரோ கார் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
திருவாயற்பாடி பகுதியில், கட்சி சின்னத்துடன் இருந்த பெயர் பலகை மூடப்பட்டன. மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும், இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதே சமயம், கிராமப்புறங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்துவதில் சுணக்கம் காணப்படுகிறது. மெதுார், போலாச்சியம்மன்குளம், பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்படாமல், சுவரொட்டிகள் அகற்றப்படாமல் உள்ளன.
- நமது நிருபர் குழு -

