/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தம் நேமம் பகுதிவாசிகள் அவதி
/
நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தம் நேமம் பகுதிவாசிகள் அவதி
நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தம் நேமம் பகுதிவாசிகள் அவதி
நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தம் நேமம் பகுதிவாசிகள் அவதி
ADDED : நவ 05, 2024 07:13 AM

திருவள்ளூர் : திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் வெள்ளவேடு அருகே அமைந்துள்ளது நேமம் கிராமம்.
இங்கிருந்து, சென்னை மற்றும் திருவள்ளூருக்கு பணி நிமித்தமாக பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ --- மாணவியர் என, தினமும் 500க்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர்.
இப்பகுதியில் நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை இல்லாததால், பேருந்துக்காக காத்து நிற்கும் பகுதிவாசிகள் மற்றும் மாணவ - மாணவியர் மழையிலும், வெயிலிலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இப்பகுதியில் ஓலை கூரையால் அமைக்கப்பட்டுள்ள நிழற்குடையால், மழை நேரங்களில் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் நேமம் ஊராட்சி பகுதியில் ஆய்வு செய்து, நெடுஞ்சாலையோரம் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டுமென பகுதிவாசிகள் மற்றும் பள்ளி மாணவ - மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.