/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சத்துணவு மையங்களுக்கு புதிய காஸ் அடுப்பு
/
சத்துணவு மையங்களுக்கு புதிய காஸ் அடுப்பு
ADDED : அக் 25, 2025 02:31 AM

திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட சத்துணவு மையங்களுக்கு, டபுள் பர்னர் காஸ் அடுப்பு வினியோகிக்கப்பட உள்ளது.
திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட 42 ஊராட்சிகளில், 120க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. பல்வேறு பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களில், அடுப்பு பழுதாகி உள்ளன.
தற்போது, 51 மையங்களுக்கு, இரட்டை பர்னருடன் புதிய காஸ் ஸ்டவ் அடுப்பு வழங்கப்படவுள்ளது. இந்த அடுப்புகள், நேற்று திருவாலங்காடு பி.டி.ஓ., அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டன.
இதுகுறித்து பி.டி.ஓ., அலுவலக அதிகாரி கூறுகையில், 'பெரியது, சிறியது, நடுத்தரம் என, மூன்று வகையான அடுப்புகள் வந்துள்ளன. இந்த காஸ் அடுப்புகள், 10 நாட்களுக்குள் அந்தந்த சத்துணவு மையங்களுக்கு அனுப்பப்படும். இதன் மூலம் விரைவாக, பாதுகாப்பாக சமைக்க முடியும்' என்றார்.

