/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
முட்புதரில் கிடந்த பச்சிளம் குழந்தை மீட்பு
/
முட்புதரில் கிடந்த பச்சிளம் குழந்தை மீட்பு
ADDED : ஜூன் 12, 2025 02:57 AM

திருத்தணி:முட்புதரில் கிடந்த பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.
திருத்தணியில் அரசு தலைமை மருத்துவமனை எதிரே சாலையோரம் இருந்த முட்புதரில் நேற்று அதிகாலை, 5:00 மணியளவில் ஒரு குழந்தை கதறி அழும் சத்தம் கேட்டது.
அவ்வழியாக சென்ற இளங்கோ என்பவர் குழந்தையின் அழு குரல் கேட்டு, அங்கு பார்த்த போது, பிறந்த சில மணி நேரமே ஆன பெண் குழந்தை இருந்ததை கண்டார்.
குழந்தையை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
பச்சிளம் குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். குழந்தையை முட்புதரில் வீசி சென்றவர்கள் குறித்து திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.