ADDED : பிப் 08, 2025 01:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி,:கும்மிடிப்பூண்டி, கோரிமேடு பகுதியில் வசித்தவர் மனோ, 27. தனியார் தொழிற்சாலையில் வெல்டராக வேலை பார்த்து வந்தார். நான்கு மாதங்களுக்கு முன் அவருக்கு திருமணம் நடந்தது.
நேற்று மாலை, கும்மிடிப்பூண்டி சிப்காட் நோக்கி, 'பேஷன் ப்ரோ' டூ - வீலரில் சென்றுக் கொண்டிருந்தார். சிப்காட் சந்திப்பில், லாரி ஒன்று உரசியதில், தடுமாறி விழுந்த அவர், லாரி சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.