/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
செய்தி எதிரொலி ஊத்துக்கோட்டை சாலையில் மழைநீர் கால்வாய் அமைப்பு
/
செய்தி எதிரொலி ஊத்துக்கோட்டை சாலையில் மழைநீர் கால்வாய் அமைப்பு
செய்தி எதிரொலி ஊத்துக்கோட்டை சாலையில் மழைநீர் கால்வாய் அமைப்பு
செய்தி எதிரொலி ஊத்துக்கோட்டை சாலையில் மழைநீர் கால்வாய் அமைப்பு
PUBLISHED ON : செப் 06, 2025 12:00 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில், தேசிய நெடுஞ்சாலை இணைப்பு பாலத்தின் கீழ் தேங்கும் மழைநீர் வெளியேற, கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
திருவள்ளூரில் இருந்து திருநின்றவூர் வரை, தேசிய நெடுஞ்சாலை இணைப்பு பணி நடந்து வருகிறது. இதற்காக, திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில், வேடங்கிநல்லுார் ஐ.சி.எம்.ஆர்., அருகில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.
திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்கள் மேம்பாலத்திலும், திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை வழியாக செல்லும் வாகனங்கள் பாலத்தின் கீழுள்ள சாலையிலும் செல்லும் வகையில் பணி நடந்து வருகிறது.
மழைக்காலத்தில் மேம்பாலத்தின் கீழ் தண்ணீர் குளம் போல் தேங்குகிறது. இதனால், ஊத்துக்கோட்டை சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, பாலத்தின் கீழ் தேங்கும் மழைநீர் வெளியேறும் வகையில், கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.