/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
ரேஷன் கார்டில் பீர்பாட்டில் அகற்றம்
/
ரேஷன் கார்டில் பீர்பாட்டில் அகற்றம்
PUBLISHED ON : ஆக 27, 2025 12:00 AM

பேரையூர்:நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, ரேஷன் கார்டில் குடும்ப தலைவர் புகைப்படத்திற்கான இடத்தில் இருந்த பீர் பாட்டில் படம் அகற்றப்பட்டது.
மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, சின்னபூலாம்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல், 46. இவரது மனைவி ஜெயப்பிரியா.
இவர்கள் ரேஷன் கார்டில் ஜெயப்பிரியா குடும்ப தலைவராக உள்ளார். இவர்களின் மகள் திருமணமாகி சென்றதால், அவர் பெயரை கார்டில் இருந்து நீக்க விண்ணப்பித்தனர்.
தற்போது தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்ய திருத்தப்பட்ட ரேஷன் கார்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்த போது, குடும்ப தலைவர் படம் இருக்க வேண்டிய இடத்தில், பீர் பாட்டில் படம் இருந்தது.
இதனால் நலவாரியத்தில் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இதன் எதிரொலியாக வருவாய் துறையினர் ஆய்வு செய்து, ஜெயப்பிரியாவின் போட்டோவை பெற்று, பீர் பாட்டில் படத்தை அகற்றிவிட்டு, ஜெயப்பிரியாவின் படத்தை அப்டேட் செய்து இ - ரேஷன் கார்டு வழங்கினர்.