/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடி, சோழவரம் ஒன்றியங்களில் நலத்திட்ட பணிகள் துவக்கி வைப்பு
/
கும்மிடி, சோழவரம் ஒன்றியங்களில் நலத்திட்ட பணிகள் துவக்கி வைப்பு
கும்மிடி, சோழவரம் ஒன்றியங்களில் நலத்திட்ட பணிகள் துவக்கி வைப்பு
கும்மிடி, சோழவரம் ஒன்றியங்களில் நலத்திட்ட பணிகள் துவக்கி வைப்பு
UPDATED : ஜன 04, 2025 01:44 AM
ADDED : ஜன 04, 2025 01:33 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி ஒன்றியம், மேல்முதலம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட குருத்தானமேடு கிராமத்தில், கவரைப்பேட்டை - சத்தியவேடு சாலையோரம், 9.50 லட்சம் செலவில் பேருந்து பயணியர் நிழற்குடை நிறுவப்பட்டது. மாவட்ட ஊராட்சி பொது நிதியில் நிறுவப்பட்ட அந்த நிழ்குடை திறப்பு விழா நேற்று நடந்தது.
மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் நடந்த விழாவில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர், நிழற்குடையை திறந்து வைத்தார்.
திறப்பு விழாவின் போது, 29.70 லட்சம் மதிப்பில், மங்களம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டுமானத்திற்கான அடிக்கல் நாட்டு கல்வெட்டும் திறக்கப்பட்டது.
சோழவரம் ஒன்றியம், கும்மனூர் ஊராட்சியில் ஆதிதிராவிடர் நல மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 49.90 லட்சம் மதிப்பில் சமுதாய கூடம் நிறுவப்பட்டது. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று திறந்து வைத்தார். விழாவில், அமைச்சர் நாசர், எம்.எல்.ஏ.,க்கள் துரை சந்திரசேகர், சுதர்சனம் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.
மீஞ்சூர் பி.டி.ஓ., அலுவலகத்தில், நேற்று மாலை, ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி தலைவர்கள் பதவி நிறைவு பாராட்டு விழா நடந்தது. சேர்மன் ரவி தலைமையில் நடந்த விழாவில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அமைச்சர் நாசர், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஊராட்சி தலைர்களுக்கு சால்வை அணிவித்து, நினைவு பரிசு வழங்கினார். துாய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
***

