/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'குடி' மையமாக மாறிய பேருந்து நிழற்குடை
/
'குடி' மையமாக மாறிய பேருந்து நிழற்குடை
ADDED : ஜன 30, 2024 12:52 AM

திருவாலங்காடு : திருவாலங்காடு ஒன்றியம், கனகம்மாசத்திரம்- பேரம்பாக்கம் நெடுஞ்சாலையில் பொன்னாங் குளத்தில் பேருந்து நிழற்குடை அமைந்துள்ளது.
இந்த நிழற்குடையை அப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பேரம்பாக்கம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வர பயன்படுத்தி வருகின்றனர்.
காலை, 6:00 மணி முதல், இரவு, 8:30 மணி வரை, இந்த பேருந்து நிறுத்தத்தில் குறைந்தபட்சம், 50 பயணியராவது காத்திருப்பர். இந்நிலையில், பயணியர் வசதிக்காக ஊராட்சி நிர்வாகம் பேருந்து நிழற்குடை அமைத்துள்ளது.
ஆனால், பயணியருக்காக அமைக்கப்பட்ட நிழற்குடையை, 'குடி'மகன்கள் ஆக்கிரமித்து மது குடிக்கும் மையமாக மாற்றி உள்ளனர்.
பகல் நேரத்திலேயே சிலர், மது அருந்திவிட்டு, டம்ளர், வாட்டர் பாட்டிலை அங்கேயே போட்டு செல்வதால், பயணியர் அங்கு சென்று அமர்வதற்கு அச்சப்படுகின்றனர்.
காவல் துறையினர் மற்றும் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணியர் எதிர்பார்க்கின்றனர்.