/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பனை மரங்கள் வெட்டியவர்கள் மீது நடவடிக்கை இல்லை: கமிஷனரகத்தில் புகார்
/
பனை மரங்கள் வெட்டியவர்கள் மீது நடவடிக்கை இல்லை: கமிஷனரகத்தில் புகார்
பனை மரங்கள் வெட்டியவர்கள் மீது நடவடிக்கை இல்லை: கமிஷனரகத்தில் புகார்
பனை மரங்கள் வெட்டியவர்கள் மீது நடவடிக்கை இல்லை: கமிஷனரகத்தில் புகார்
ADDED : டிச 19, 2024 10:44 PM
சோழவரம்,:சோழவரம் அடுத்த, பூதுார் கிராமத்தில், கடந்த ஜூலை மாதம், 1ம் தேதி, வீட்டுமனைகள் அமைப்பதற்காக, அதே பகுதியில் கரை புறம்போக்கு என்ற வகைப்பாட்டில் இருந்த, 50க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன.
தனிநபர் வசதிக்காக, பனை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம் கிராமவாசிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இது குறித்து, வருவாய்த் துறை வாயிலாக, சோழவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. ஐந்து மாதங்கள் முடிந்த நிலையில், புகார் மீது போலீசார் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த ஆண்டு, சட்டசபை வேளாண் நிதிநிலை அறிக்கையின்போது, 'தமிழ்நாட்டில் உள்ள பனை மரங்களை வெட்டுவதற்கு அந்தந்த பகுதி மாவட்ட கலெக்டரின் அனுமதி கட்டாயம் பெற வேண்டும் எனவும், அனுமதி இன்றி மாநில மரமான பனை மரத்தை வெட்டுவது குற்றம்' எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அரசு அனுமதியின்றி, அரசு நிலத்தில் இருந்த பனை மரங்கள் வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத சோழவரம் காவல்துறை மீது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படத்தியது.
இது தொடர்பாக நேற்று முன்தினம், ஆவடி காவல் ஆணையகரத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்கும் முகாமில், புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புகாரில், 'பனை மரங்களை் வெட்டியவர்கள் மீது இதுவரை எந்த விசாரணையும் நடைபெறவில்லை. தனியார் வீட்டுமனைப் பிரிவு நிறுவனத்தின் வியாபார நோக்கத்திற்காக பனை மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.